நகரை அழகுபடுத்தும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

நகரை அழகுபடுத்தும் புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் காணப்படும் விளம்பரப் பலகைகளை எதிர்வரும் 30 நாட்களுக்குள் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுமேதா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு இதற்கான அறிவித்தல் பத்திரிகைகளின் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அதன் பிரகாரம் பொரளை முதல் நாடாளுமன்றம் வரை, கொட்டாவ வீதி, கிம்புலாவல சந்தி, சுனில் மாவத்தை, தலவத்துகொட – பிட்டகோட்டே வீதியின் கிம்புலாவத்த சந்தி வரை, டென்ஸில் கொபேகடுவ மாவத்தையின் பொல்துவ முதல் பத்தரமுல்ல வரை, பத்தரமுல்ல சந்தி முதல் பலம்துன்ன வரையான வீதிகளில் காணப்படும் விளம்பரப் பலகைகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Sharing is caring!