நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்திகள் பண்ணைகள்

நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்திகளைத் தயாரிக்கக்கூடிய 25,000 விவசாயப் பண்ணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வேலையின்மை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இல்லத்தரசிகளை, இந்த வேலைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Sharing is caring!