நடைபெறவுள்ள கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொள்ள மாட்டார்

பாராளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இன்று மாலை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

Sharing is caring!