நன்மை பயக்குமா? TNA – JVP சந்திப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (11) இடம்பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், கே. கோடீஸ்வரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, பிரதம செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அரசியல் குழு உறுப்பினர் கே.டீ. லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டின் அரசியல் நிலை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Sharing is caring!