நல்லை கந்தனுக்கு கொடியேற்றம் இன்று
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், இன்று (16) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் கொடியேற்றத் திருவிழா இடம்பெறவுள்ளது.
ஆலயத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாக எடுத்துச்செல்லப்பட்டு, ஆலயத்தில் நேற்று (15) ஒப்படைக்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலையினை செங்குந்தர் பரம்பரையினர் வழங்குவது வழக்கமாகும்.
இதேவேளை, வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலய பெருவிழாவினை முன்னிட்டு போக்குவரத்துக்கான மாற்றுப்பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் குறிப்பிட்டுள்ளார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S