நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் 1 லிட்டரின் விலை 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  புதிய விலை 128 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 163 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1 லிட்டர் சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 134 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

Sharing is caring!