நாட்டின் சில மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

நாட்டின் சில மாவட்டங்களில் இன்று (24) 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களிற்குள் 90 மி.மீ. மழை பெய்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் ஹபரணயில் அதிக மழைவீழ்ச்சியாக 131 மி.மீ. மழைவீழ்ச்சி  பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொழும்பில் 114.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் ரத்மலானையில் 94.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் மத்தள பகுதியில் 77.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் வவுனியாவில் அதிக வெப்பநிலையாக 37.7 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பொலன்னறுவையில் 37.6 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் கடற்பிராந்தியங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Sharing is caring!