நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மேற்குப் பகுதியில் அரபு கடற்பிராந்தியத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக கடந்த 3 நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்தது.

தற்போது தாழமுக்கமானது நாட்டிலிருந்து நகர்ந்து செல்கின்றபோதிலும் மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மாகாணங்கில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், மின்னல் தாக்கங்களிலிருந்து அவதானமாக செயற்படுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Sharing is caring!