நாட்டின் பிரதமரை தீர்மானிப்பது நாடாளுமன்றமே தவிர,  ஜனாதிபதி அல்ல

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில், ரணில் விக்ரமசிங்கவை,  பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று, ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது,  ஒரு நபரை திருப்திப்படுத்துவதற்காக,  அரசியலமைப்பை முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை,  களுத்துறையில்  கூட்டமொன்றில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,  நாட்டின் பிரதமரை தீர்மானிப்பது நாடாளுமன்றமே தவிர,  ஜனாதிபதி அல்ல” என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது

Sharing is caring!