நாட்டின் விவசாயத்துறையில் பாரிய வளர்ச்சி

நாட்டின் விவசாயத்துறையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

30ஆவது மஹாவெலி விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டபோதே, ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

கடந்து 3 வருடங்களுக்குள் விவசாயத்துறையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

எந்தவொரு அரசாங்கத்தினாலும் விவசாயம் தொடர்பில் முன்னெடுக்கப்படாத சேவைகள், தமது ஆட்சியில் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிலுள்ள விவசாயிகளின் நலன்கருதி அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!