நாட்டில் சட்டவிரோதமாக இயங்கிவரும் போலி முகவர் நிலையங்கள்

நாட்டில் சட்டவிரோதமாக இயங்கிவரும் போலி முகவர் நிலையங்கள் வெகுவிரைவில் சுற்றிவளைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

இதுவரைக் காலமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் பக்கச்சார்புடனேயே செயற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அங்கிருந்த ஊழியர்களுடன் குறை நிறைகளை கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Sharing is caring!