நாட்டில் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளது – வீதி பாதுகாப்பு தொடர்பான ​தேசிய சபை

நாட்டில் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான ​தேசிய சபை தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ரயிலில் மோதி 241 பேர் உயிரிழந்துள்ளதாக சபைத் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விபத்துகளைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

அத்துடன், ரயிலில் மோதுண்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு நவீன முறைகளைக் கையாளவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Sharing is caring!