நாட்டில் 325 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன

குளமும் கிராமும் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் 325 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

பசுமைக் காலநிலை நிதியத்தின் மூலம் இந்த வேலைத்திட்டத்திற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.

பசுமைக் காலநிலை நிதியமும் அரசாங்கமும் இதற்காக 5 கோடி அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு வருட காலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தில் அநுராதபுரம், வவுனியா, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களில் 16 எல்லங்கா குளக்கட்டமைப்புகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

முதற்கட்டத்தின் கீழ் அநுராதபுரம், வவுனியா மாவட்டங்களில் 56 குளங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Sharing is caring!