நாமல் குமாரவுக்கு அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி இடம்பெற்றுள்ளதாக வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவுக்கு இன்று (26) காலை 10.00 மணிக்கு அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாமல் குமாரவின் குரல் மாதிரியைப் பெற்றுக் கொள்வதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

நாமல் குமாரவை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிபதி லங்கா ஜயரத்ன நேற்று (25) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Sharing is caring!