நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்து கைது செய்யுமாறு வேண்டுகோள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்து கைது செய்யுமாறு மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் மற்றும் விளையாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயாணி ஜயவிக்ரம பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதி கொலை சதி தொடர்பில் நேற்று (18) சபையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்ற வேளையில் கருத்துத் தெரிவிக்கையில் இவர் இதனைக் கூறினார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபரை பதவியில் வைத்துக் கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதில், தடைகள் ஏற்படலாம் என்பதனால், இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Sharing is caring!