நாளொன்றுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் – உண்ணாவிரதப் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்னெழுச்சி மலையக இளைஞர்கள் சார்பில் இருவர் பங்கேற்றுள்ளனர்.

1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தாம் முன்னெடுத்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Sharing is caring!