நிதி அமைச்­சின் அவ­தா­னம் இன்­ன­மும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. அபி­வி­ருத்­திப் பணி­கள் ஆரம்­பிப்­ப­தில் தாம­தம்

பலாலி வானூர்­தித் தள ஆரம்ப அபி­வி­ருத்­திப் பணி­களை சிவில் வானூர்­தித் திணைக்­க­ளம் முன்­னெ­டுப்­ப­தற்­காக ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்­பில் சமர்­பிக்­கப்­பட்ட அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­துக்கு நிதி அமைச்­சின் அவ­தா­னம் இன்­ன­மும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. அபி­வி­ருத்­திப் பணி­கள் ஆரம்­பிப்­ப­தில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ளது.

பலாலி வானூர்­தித் தளத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மா­கத் தர­மு­யர்த்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. உட­ன­டி­யாக அந்­தப் பணி­களை ஆரம்­பிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டது.

ஆரம்­பத்­தில் இந்­தியா ஊடாக இத­னைச் செய்ய தீர்­மா­னித்­தி­ருந்­தா­லும், தற்­போ­துள்ள நிலை­யி­லி­ருந்து பிராந்­திய வானூர்­திச் சேவையை ஆரம்­பிக்­கும் அள­வுக்­கான அபி­வி­ருத்­திப் பணி­களை மாத்­தி­ரம் இலங்கை சிவில் வானூர்­தித் திணைக்­க­ளம் முன்­னெ­டுக்க முடிவு செய்­யப்­பட்­டது.

இதற்­காக ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டது. சுற்­று­லாத்­துறை அமைச்சு, சிவில் வானூர்­திப் போக்­கு­வ­ரத்து அமைச்சு, தலைமை அமைச்­ச­ரின் அமைச்சு ஆகிய மூன்­றும் இணைந்து இந்த அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­தைச் சமர்­பித்­தி­ருந்­தன.

பொது­வில் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரங்­க­ளுக்கு நிதி அமைச்­சின் அவ­தா­னம் பெறப்­பட்டே, அனு­மதி வழங்­கப்­ப­டும். அத­ன­டிப்­ப­டை­யில் பலாலி வானூர்­தித் தள அபி­வி­ருத்தி அமைச்­ச­ர­வைப் பத்­தி­ர­மும் நிதி அமைச்­சின் அவ­தா­னத்­துக்­காக கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

25 இற்கு மேற்­பட்ட அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரங்­கள் நிதி அமைச்­சில் உள்­ள­தால், பலாலி அபி­வி­ருத்­திக்­கு­ரிய அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­துக்கு அவ­தா­னம் வழங்­கு­வது தாம­த­ம­டை­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Sharing is caring!