நிரந்தர காணி உறுதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை

மலையக மக்களுக்கு முதற் தடவையாக நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரின் காணிகளை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Sharing is caring!