நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 35 படகுகளில் தீ

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீலாப்பொல மகாவலி கங்கையை அண்மித்த மணல் ஏற்றும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 35 படகுகளில் தீ வைக்கப்பட்டுள்ளது.

119 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26 பேருக்கு சொந்தமான 35 படகுகளில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஒரு தனிப்பட்ட நபரால் அல்லது குழுவினரால் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

Sharing is caring!