நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி ஆகியோரை எதிர்வரும் பெப்ருவரி 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நேற்று அறிவித்தல் விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சஷீ வீரவங்ச தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் சாட்சிகளை முன்வைப்பதற்கே அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது.

போலியான தகவல்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வழங்கி அதிசிறந்த இராஜதந்திர கடவுச் சீட்டு மற்றும் சாதாரண கடவுச் சீட்டு என்பனவற்றை பெற்றுக் கொண்ட விமல் வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Sharing is caring!