நீர்வெட்டு….கொழும்பில் 21 மணிநேரம் நீர்வெட்டு

கொழும்பின் சில இடங்களில், இன்று (13) காலை 8 மணிமுதல் நாளை மாலை 5 மணிவரையான 21 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய மற்றும் ருக்மல்கம உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், பெலேன்வத்த, மத்தேகொட, ​ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க உள்ளிட்ட இடங்களுக்கு நீர்வெட்டு இடம்பெறும்.

அவசர திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Sharing is caring!