நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரிக்கும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால், நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளாக பூச்சியியல் தொடர்பிலான ஆய்வுகளை நடத்தும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் இந்த அபாயம் நிலவுவதாக சங்கத்தின் தலைவர் நஜின் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம், குருநாகல், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் நுளம்பு குடம்பிகளின் பெருக்கும் ஓரளவு அதிகரித்துள்ளாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி முதல் இரண்டாம் கட்ட நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு டெங்கு ஒழிப்புப் பிரிவு தீர்மானித்துள்ளது.

அதேநேரம், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால், 39,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Sharing is caring!