”நெஞ்சம் மறப்பதில்லை” இசை நிகழ்ச்சி நாளை

சக்தி தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ள ”நெஞ்சம் மறப்பதில்லை” இசை நிகழ்ச்சி நாளை (08) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்கவுள்ள தென்னிந்திய இசைக்கலைஞர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நாளை மாலை 6.30-க்கு ”நெஞ்சம் மறப்பதில்லை” இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் இசையமைப்பாளர் ஆர்.பரத்வாஜ், பின்னணிப் பாடகர்களான வி.வி.பிரசன்னா, எச். அனந்து ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

சாரங்காவின் இசையில், சக்தி சுப்பர் ஸ்டார்ஸூம் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Sharing is caring!