நோர்வே மற்றும் இங்கிலாந்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பயணம்

நோர்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று (03) பயணமாகவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, நோர்வே பிரதமர் அர்னா சோல்பர், அந்நாட்டின் உயர் உறுப்பினர் சபையின் தலைவர் மற்றும் வெளிவிவகார அமைச்சரை பிரதமர் சந்திக்கவுள்ளார்.

நோர்வே விஜயத்தின் பின்னர் லண்டன் நகரை நோக்கி பயணிக்கவுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை சந்திக்கவுள்ளார்.

மீன்பிடி, நீர்வளம் மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, பாராளுமன்ற உறுப்பினர்கள் காவிந்த ஜயவர்தன மற்றும் ஹேஷா விதானகே ஆகியோரும் இந்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தத் தருணத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை இரத்துச் செய்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுமாறு, பிரதம அமைச்சராக செயற்படும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அண்மையில் கூறியிருந்தார்.

இந்தக் கொள்கைக்கு அமைய, அவரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

Sharing is caring!