பகிடிவதைகள் தொடர்பில் வழக்குத்தாக்கல் செய்யுமாறு, பொலிஸாருக்கு ஆலோசனை

பல்கலைக்கழகங்களின் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பில் வழக்குத்தாக்கல் செய்யுமாறு, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுறையில் இன்று தெரிவித்தார்.

பொலன்னறுவை – ஹிங்குராங்கொடை தேசிய தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

நெதர்லாந்தின் உதவியில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்திற்கு 700 கோடி ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர திட்டத்தின் D1 வடக்கு கால்வாய்க்கு உரிய பழைமைவாய்ந்த தீப்பெட்டி பாலத்திற்கான நிர்மாணப்பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தப் பாலம் சேதமடைந்தமையால் 15,000 ஏக்கர் நெற்செய்கைக்கான நீர் விநியோகம் தடைப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு 250 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Sharing is caring!