பகிடிவதையா?..உடனடியாக தெரிவிக்க…தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் பகிடிவதைகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான முறைப்பாடுகளை சமர்பிப்பதற்கு விசேட அலுவலகம் ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பகிடிவதை தொடர்பில் 011 – 212 3700 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தொலைபேசி இலக்கத்தினூடாக 24 மணித்தியாலங்களும் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை, பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கான அலுவலகம் அரச விடுமுறைகள் தவிர்ந்த ஏனைய தினங்களில், காலை 8.30 – 4.00 மணி வரை செயற்படவுள்ளது.

இந்த அலுவலகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!