பகிடிவதையா?…கன்னத்தில் அறைவயுங்கள்…அரசாங்கம் கோரிக்கை

பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக செல்லும் மாணவர்களுக்கு எவராவது பகிடிவதை செய்தால் அவர்கள் எவராக இருந்தாலும் கண்ணத்தில் அறையுமாறு சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் புதிய மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சிறிலங்காவின் ருஹுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கான புதிய கடடமொன்றை திறந்துவைத்து உரையாற்றும் போதே சிறிலங்கா அரசாங்கத்தின் உயர் கல்வி அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச கண்ணத்தில் அறையும் மாணவர்களை பாதுகாப்பதாகவும் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாத்தறை – கம்புறுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கம்உதாபூமி பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விஞ்ஞான பீட வளாகத்திற்கான புதிய கட்டடத் திறப்பு விழா உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இதனையடுத்து அங்கு கூடியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பல்கலைக்கழகங்களில் தொடருமு் பகிடிவதைக் கொடூரங்களை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தார்.

இதற்காக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பகிடிவதை ஒழிப்புச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதாகவும் கூறிய அமைச்சர், பகிடிவதை காரணமாக பல்கலைக்கழங்களுக்கு தெரிவாகும் ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவதற்கும் பின்வாங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“ பகிடிவதைக்கு எதிராக நாம் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றோம். ஆனால் பகிடிவதையை முழுமையாக நிறுத்த வேண்டுமானால் புதிதாக பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்கள் தமது உரிமைகளை சரிவர பயன்படுத்த வேண்டும். பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட உத்தமர்கள் இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு இருக்கும் உரிமைகளும் புதிதாக வரும் மாணவர்களுக்கும் இருக்கின்றன. புதிதாக வரும் மாணவர்கள் கூட்டுச் சேர்ந்து பல்கலைக்கழகங்களின் பீடங்களுக்கு வாருங்கள். இதன்போது எவராவது ஒருவரோ ஒரு தரப்போ துன்புறுத்த முற்பட்டால் தற்காப்பிற்கு இருக்கும் உரிமையை பயன்படுத்துங்கள். இதன்போது சிரேஷ்ட மாணவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஓரிருவரின் கண்ணங்கள் வெடித்தாலும்

பிரச்சனையில்லை. நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம். அச்சமின்றி அதனை நடைமுறைப்படுத்துங்கள். கண்ணத்தில் அறைந்ததும் எங்களுக்கும் அதேபோல் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கும் அறிவியுங்கள். அதேபோல் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், துணை வேந்தருக்கும் அறிவியுங்கள். அதேபோல் எமது உயர் கல்வி அமைச்சின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் நடவடிக்கை அலுவலகமொன்று இருக்கின்றது. அந்த அலுவலகத்திற்கு அறிவியுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் “- இவ்வாறு சிறிலங்கா அரசாங்கத்தின் உயர் கல்வி அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Sharing is caring!