பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தபால் ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் மீண்டும் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை தபால் தொழிற்சங்க ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு பெற்றுத்தரும் வரையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தபால் தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் தபால் நிலையங்களில் 15 இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் குவிந்துள்ளதாக சிந்தக பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

பகிஷ்கரிப்பு காரணமாக குவிந்துள்ள கடிதங்களைப் பகிரும் நடவடிக்கை இன்று மற்றும் நாளைய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!