பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் 10 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளார்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் 10 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் நாடு திரும்பியதும், பொதுஜன பெரமுனவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்கத் தேவையான கூட்டணி சேர்க்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த 5 ஆம் திகதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளாமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் அரசியல் மட்டங்களில் முன்வைக்கப்பட்டன. அரசாங்க தரப்பினர் பசில் ராஜபக்ஷ இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லையென தெரிவித்து வந்தனர்.

மாற்றமாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்த பின்னரே பசில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து சென்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!