பசும் பாலுக்கு உரிய கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை

தங்களிடம் கொள்வனவு செய்யப்படும் பசும் பாலுக்கு உரிய கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை என கிளிநொச்சி – கந்தபுரம் மற்றும் அக்கராயன் பகுதி பால் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

அக்கராயன் மற்றும் கந்தபுரத்தில் 158-ற்கும் மேற்பட்ட பால் பண்ணையாளர்கள், உரிய கொடுப்பனவு வழங்கப்படாது பாதிக்கப்பட்டுள்ளனர்.

மில்கோ பால் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பாலுக்கான கொடுப்பனவுகள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என பால் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் தற்போது நிலவி வரும் வறட்சியினால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
பசுக்களை சிரமத்திற்கு மத்தியிலேயே பராமரித்து வருவதாகவும் பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

வறட்சிக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச்செல்லும் தமக்கான கொடுப்பனவுகளை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி – அக்கராயன் மற்றும் கந்தபுரம் பால் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Sharing is caring!