பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கள் சில முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தெமட்டகொட தலைமையக வளாகத்தில் ​நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற அரஜூன ரணத்துங்கவை கைது செய்யும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பிரதி தலைவர் கே.ஜே.பிரேமாந்த குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று மாலை பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தெமட்டகொட தலைமைக்காரியாலய வளாகத்திற்கு சென்றிருந்த போது அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன்போது முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மூவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் தொழிற்சங்கங்கள் நேற்றிரவு முதல் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்தனர்.

Sharing is caring!