பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுவதற்கு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானம்

ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, நாளை (26) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுவதற்கு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் தொழிற்சங்கங்கள் இணைந்து நாளைய தினம் ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்திருந்தன.

அரசியல் தலையீடுகளுடன் கல்வி சேவைகளுக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவிருந்தது.

இந்நிலையில், இன்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது, வழங்கப்படவிருந்த பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Sharing is caring!