பணிப்பகிஸ்கரிப்பு….அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் இன்று

அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றியம் இன்று (27) நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபடவுள்ளது.

ஊதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

15 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 15,000க்கும் அதிகமானவர்கள் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் இணையவுள்ளதாக, அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவின் செயலாளர் உதயசிறி தெரிவித்துள்ளார்.

தமது பிரச்சினைகள் தொடர்பில் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரிடம்  வினவியபோது, இந்த விடயம் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானத்துக்கு வரமுடியாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!