பண்டாரவளை – பூனாகலை வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது

பண்டாரவளை – பூனாகலை வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் பூனாகலை வீதியூடான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

மண் மேடுகளை அகற்றும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பூனாகலை வீதியூடாக பயணிக்கும் வாகன சாரதிகளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Sharing is caring!