பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் பதுளை நகரங்களுக்கு இடையில் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

குறித்த விசேட ரயில் இன்று முதல் காலை 7.30 க்கு கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நாளை முதல் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி ரயிலொன்று பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் விசேட பஸ் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நீர்கொழும்பு, ஜா – எல, வென்னப்புவ பகுதிகளில் குறுந்தூர பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்தார்.

Sharing is caring!