பதவியேற்பிற்கு முன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் என்ன நிகழ்ந்தது?

இலங்கை அரசியலில் அதிரடியான திருப்பங்கள் இன்று முன்னிரவு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு சற்று முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் முன்னரே திட்டமிடப்பட்டு, இது குறித்த செய்திகளும் முன்னரே வெளியாகுவது வழக்கம். ஆனால் இன்று திடீரென கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரா.சம்பந்தன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா, புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய கூட்டமைப்பின் சந்திப்பு மாலை 5.30 மணிக்கு நடந்தது. இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக இரவு 7.30 அளவில் மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றார்.

இன்றைய சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் பிரமுகர்களை தொடர்பு கொண்டு கேட்டபோதும், அது குறித்து இப்போது பேச முடியாது, நாளை கட்சி உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று தெரிவித்தனர்.

Sharing is caring!