பதிவு செய்துகொள்ளாமல் சிகிச்சைகளை முன்னெடுக்கும் ஆயுர்வேத வைத்தியர்கள் மீது சட்ட நடவடிக்கை

பதிவு செய்துகொள்ளாமல் சிகிச்சைகளை முன்னெடுக்கும் ஆயுர்வேத வைத்தியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆயுர்வேத மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான வைத்தியர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆயுர்வேத பணிப்பாளர் நாயகம் K.D.P.S. குமாரதுங்க குறிப்பிட்டார்.

போலி ஆயுர்வேத வைத்தியர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, 0115 672 905 அல்லது 0115 672 906 ஆகிய இலக்கங்களுக்கு போலி ஆயுர்வே வைத்தியர்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் எனவும் K.D.P.S. குமாரதுங்க சுட்டிக்காட்டினார்.

Sharing is caring!