பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 1,163 பேர் கைது

வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில், பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 1,163 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 36,11,293 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனுமதியின்றி ரயிலில் வியாபார நடவடிக்​கைகளில் ஈடுபட்ட 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து, 1,65,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

மூன்றாவது வகுப்பிற்கான பயணச்சீட்டினைப் பெற்று, இரண்டாம் வகுப்பில் பயணித்த 41 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1,25,425 ரூபா தண்டப்பணம் அறவிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தில் பயணச்சீட்டு இன்றி பயணித்தவர்களின் எண்ணிக்​கை அதிகரித்துள்ளமையால், பயணச்சீட்டு பரிசீலனை செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!