பரிசோதனை…..இந்திய கழிவுகள் புத்தளத்தில்

புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட மருத்துவ கழிவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பரிசோதனை நடவடிக்கைகளுக்காக இன்று (14) காலை தமது சபையின் குழுவொன்றை புத்தளத்திற்கு அனுப்பவுள்ளதாக கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமையாளர், பேராசிரியர் ரேனி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

பரிசோதனைகள் முன்னெடுக்கும் வரை குறித்த கடற்கரையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் உடப்பு தொடக்கம் – தொடுவாய் வரையான சுமார் 10 கிலோமீற்றர் வரையான கடற்கரையில்
கழிவுப்பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.

மருத்துவ கழிவுப்பொருட்கள், கண்ணாடி போத்தல்கள், பொலித்தீன் போன்ற கழிவுப்பொருட்களே அதிகளவில் கரையொதுங்கியுள்ளன.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இந்தக் கழிவுப் பொருட்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் இந்திய லேபல் பொறிக்கப்பட்ட கழிவுப் பொருட்களே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு கரையொதுங்கும் கழிவுப்பொருட்களினால் ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்ற அச்சம் மீனவர்களிடத்தில் காணப்படுகின்றது.

இதேவேளை, வடமராட்சி கடற்பகுதிகளான தொண்டமானாறு, அக்கரை, வளலாய் கடற் பகுதிகளில் இந்திய முகவரி பொறிக்கப்பட்ட மருத்துவ கழிவுகள் கரையொதுங்கியமை தொடர்பில் 2017 ஆம் ஆண்டு நம்பர் மாதம் நாம் 17 ஆம் திகதி நாம் செய்தி வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!