பருத்தித்துறையில் அடித்துக்கொலை….வன்முறை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, திக்கம் பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 8 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொல்லால் தாக்கப்பட்ட குறித்த நபர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

நாச்சிமார் கோவிலடி, திக்கம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது சகோதரனுக்கு வழங்கிய இரண்டு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்வதற்கு சென்றபோது, ற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த சந்தேகநபரும் பொலிஸ் பாதுகாப்புடன் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பருத்தித்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!