பருத்தித்துறையில் 88 கிலோ கேரள கஞ்சா….இருவர் கைது

பருத்தித்துறை கடற்கரையோரத்தில், சுமார் 133 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இன்று அதிகாலை இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 88 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 47 மற்றும் 60 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கேரள கஞ்சா தொகை, சில நாட்களுக்கு முன்னர், கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

Sharing is caring!