பலர் பாராளுமன்றத்தினுள் ஆர்ப்பாட்டம்

* பாராளுமன்றம் அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

* சபாநாயகர் ஆசனத்தில் அருந்திக்க பெர்னாண்டோ அமர்ந்திருக்கிறார்.

* ஹெலிகொப்டர் ஒன்று பாராளுமன்ற வளாகத்தினுள் வருகை தந்துள்ளது.

* இந்நிலையில், நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்விற்கு கத்தியுடன் வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவை கைது செய்யுமாறு பாராளுமன்றத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

* பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் தற்போது பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவருக்கு எதிராக புத்தகங்களையும் கதிரைகளையும் வீசியெறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

* ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக பாராளுமன்றத்திலிருந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தற்போது வௌியேற்றப்பட்டுள்ளார்.

* செங்கோலும் வௌியே எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

* வௌிநாட்டுத் தூதுவர்கள் அமர்ந்து அமளிதுமளியை கண்காணித்து வருகின்றனர்.

*  பாராளுமன்றத்தின் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்தோடு எவ்விதமான சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனை தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

* பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Sharing is caring!