பலாங்கொடையில் வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளையில் இரண்டு சந்தேகநபர்கள் கைது

பலாங்கொடையில் வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி கொழும்பு – பலாங்கொடை பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்திலிருந்து 12 இலட்சம் பணமும் காசோலைகளும் திருடப்பட்டிருந்தன.

பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!