பலாலி விமான நிலையத்தை நேரில் சென்று ஆராய பிரதமர் முடிவு

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார்.

இதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி பலாலி செல்லவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவது மற்றும் அதற்கு தேவையான காணிகள், அதனை அண்டிய காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இந்திய தூதுவர் தரன்ஜித் சிங்க் உடன் இணைந்து பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டு அதனை அபிவிருத்தி செய்வது குறித்த திட்டங்களை இறுதி செய்வதாகவும் ரணில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்

Sharing is caring!