பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வௌிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை – நிமல் சிறிபால டி சில்வா
பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வௌிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
A320 ரக விமானங்களைத் தரையிறக்கும் வகையில் விமான ஓடுதளத்தை புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை வழங்க சிவில் விமான சேவை அதிகாரசபை மற்றும் அபிவிருத்தி சபை என்பன இணங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்ளாது புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது அதிகாரிகளிடம் அமைச்சர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சும் சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்து அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.