பல்கலைக்கழகம் இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளது

பேராதனை பல்கலைக்கழகம் இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

மாணவர்கள் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்து தங்கியிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்தும் கட்டிடத்தில் தங்கியிருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

வருகையை பூர்த்தி செய்யாத நான்கு மாணவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதியை வழங்குமாறு குறித்த மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து, இன்று மாலை 6 மணிக்கு முன்னதாக பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதியிலிருந்து அவர்களை வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.

Sharing is caring!