பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப்புள்ளி இந்த வாரத்தில் அறிவிக்கப்படும்

பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப்புள்ளி இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2017 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, வெட்டுப்புள்ளி நிர்ணயிக்கப்படும் என ஆணைக்குழு அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 25,000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்காக 50,000-இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Sharing is caring!