பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…….புகைகுண்டு பிரயோகம்

கொழும்பு – கோட்டை, லோட்டஸ் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது இன்று பிற்பகல் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு – கோட்டை லோட்டஸ் வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்தை அண்மித்த வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது இன்று பிற்பகல் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் பல்கலைக்கழக மாணவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Sharing is caring!