பல சக்திகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தியுள்ளேன். இன்னும் பல சக்திகள் தம்மிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தன்னிடமுள்ள பல சக்திகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தியுள்ளேன் எனவும் தேவைப்படின் பயன்படுத்துவதற்கு இன்னும் பல சக்திகள் தம்மிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (08) நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள அரசாங்கத்தின் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அவ்வாறு செய்யாவிடின் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தன்னிடம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை  செயல்படுத்த தயாராகவுள்ளேன் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினால், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய காலத்தை முழுமையாக்க முடியுமாக இருக்கும் எனவும் அறிவிப்புச் செய்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு எந்தவித தேவையும் இல்லையெனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

Sharing is caring!