பல லட்சம் ரூபாய் பணத்தை பெண் ஒருவர் இழந்த சம்பவம்

இலங்கையின் அரச வங்கியின் ATM இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல லட்சம் ரூபாய் பணத்தை பெண் ஒருவர் இழந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

வெலிகம பகுதியிலுள்ள அரசாங்க வங்கிக்கு சென்ற பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த பெண் மூன்று இலட்சம் ரூபா பணத்தை வைப்பு செய்வதற்கு முயற்சித்த போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பணத்தின் ஒரு பகுதி மாத்திரம் வைப்பிலிடப்பட்டுள்ளது. அதிக பணம் இயந்திரத்திற்கு வெளியே வந்துள்ளது.

இது தொடர்பில் அந்த பெண் உடனடியாக பாதுகாப்பு பிரிவிடம் முறைப்பாடு செய்ய சென்றுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பணம் வைப்பிட வந்த மற்றுமொரு நபர் இயந்திரத்தை செயற்படுத்திய போது பெண்ணின் பணம் வெளியே வந்துள்ளது. அதனை குறித்த நபர் எடுத்துக் கொண்டு அங்கிருந்து உடனடியாக சென்றுள்ளார்.

எனினும் இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடீவியில் பதிவாகியிருந்தமையினால் அதனை கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Sharing is caring!